X

Getting Pregnant

Pregnancy

New Born

Toddler

Kids

By City

Collaborate With Us

ஆதிராவும் அம்மாவும்!

Published on: 16 January , 2018 | Mythili Ramjee

"ரம்யா ...! என்ன செய்யறே குழந்தையை வெச்சுண்டு லேப் டாப்லெ ..? " அம்மா பதறிக்கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டாள் . "என்ன மா? ஏன் இப்படி டென்ஷனா இருக்கே? " "பின்ன? குழந்தை ஆதிராக்கு   6 மாசம் ஆறது... அதை வெளியே காத்தோட்டமா, கொஞ்சம் வெய்யில் அப்புறம் நிலா வெளிச்சத்திலே வெச்சுக்காம இப்படியா ஒரு ஏசி ரூமிலே அடைச்சு வெச்சு..போடி... " அம்மா சளித்துக் கொண்டாள் . "அம்மா... நான் இன்னும் 6 மாசம் ஒர்க் பிரேம் ஹோம் தான் . இப்பதான் பால் கொடுத்திட்டு அப்படியே மடியிலே வெச்சுண்டேன்..." "முதல்லே அந்த லேப்டாப் மூடிட்டு அப்புறம் குழந்தையை தூக்கு. எத்தனை தடவை சொல்லிருக்கேன் அதை ஆபரேட் பண்ணிண்டே குழந்தைக்கு பால் கொடுக்காதே.... அது நல்லதில்லைனு. சொன்னா கேட்கறியா? முதலிலே எழுந்து வா வெளியே. சாயங்காலம் 5 மணி ஆறது... கொஞ்சம் காலாற நடந்துட்டு பக்கத்திலே இருக்கிற பார்க்கில் கொஞ்சம் உட்கார்ந்துட்டு வரலாம். " " நோ சான்ஸ் மா. நிறைய வேலை இருக்கு. ஒரு 1/2 மணி நேரம் கழித்து பாப்பாக்கு பால் கொடுத்திட்டு தூங்க வைக்கணும். " " சொல்றதைக் கேளு. குழந்தைக்கு உன் சௌகரியத்திற்கு பாலை கொடுக்க கூடாது. இப்பதான் சாப்ட்டிருக்கு. 1 1/2 மணி நேரம் கழித்து நன்றாக கொடு. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ ரம்யா" அம்மா கெஞ்சுவது போல் சொல்ல " என்னமா நீ. ? சரி நான் வேலை முடிச்சுட்டு வரேன்." அம்மா குழந்தையை வெளியே எடுத்துச்  சென்றாள். ரம்யாவிற்கு கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. 2 வருடங்கள் முடிந்து கர்ப்பம் தரிக்காததால் கொஞ்சம் கவலை வந்தது. அவளுக்கு இல்லை அம்மாவிற்கு. டாக்டரிடம் சென்றனர். ஒன்றும் ப்ரொப்லெம் இல்லை. இரண்டு சிறிய கருப்பை நார்த்திசுக்கட்டிகள் (uterine fibroids ) இருப்பதாய் கூறினார். அதைக் கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்பு டாக்டர் கவலைப் பட ஒன்றும் இல்லை என்று கூறி அதனை விளக்கினார். "Fibroids கர்ப்பப்பையின் வெளியில் தான் உள்ளன. மிகவும் சிறிய அளவில் இருக்கு. அதனால் கவலைப் பட தேவையில்லை. அப்படியே விட்டுவிடலாம். குழந்தை கருத்தரிப்பதில் எந்த தடையும் இல்லை. மனசை போட்டு அலட்டிக்காதீங்க. " “இந்த fibroids அவ்வளவு சீக்கிரம் வளருவது இல்லை.  கர்ப காலத்தில் மட்டுமே கொஞ்சம் வளர வாய்ப்பு உள்ளது. அதனால் எந்த பாதிப்பும் இல்லை. முறையாக checkup செய்து கொண்டால் ஒன்றும் பாதகமில்லை. இதற்காக பதட்டப் படவோ, வேதனைப் பாடவோ அவசியமும் இல்லை. பயமும் தேவை இல்லை. பல வருடங்கள் ஆகும் அது வளர. அப்பொழுது ஏதேனும் உபத்திரவம் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு எந்த வித டென்ஷன் இல்லாமல் ஆரோக்கியமாய் இருந்து குழந்தையை பெற்று எடு. . அல்லாம் நல்ல விதமாய் நடக்கும்.  stress ஆக வேண்டாம்.  “டாக்டரின் ஆறுதலான பேச்சும் தைரியமும் துணை நின்றது. பகவான் கிருபையால் கருத்தரித்தாள் ரம்யா . டாக்டர் கூறியபடி செக் அப் செய்துகொண்டாள் . இதோ அழகான இந்த ஆதிரா பிறந்தாள் . சுகப் பிரசவம் இல்லை... சிசேரியன் செய்துதான் பிறந்தது. fibroids இருப்பதால் டாக்டர் csection செய்ய முடிவெடுத்தார். ஒரு பிரச்சனையும் இல்லை... இதைப் பற்றி கவலைப் படாமல் இருங்கள் என்று டாக்டர் கூறிவிட்டார். வெளி வராண்டாவில் பக்கத்து வீட்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவர்களைப் பார்த்தவுடனே ஆதிரா கையை , காலை வேகமாக அசைத்தது சத்தம் போட ஆரம்பித்தாள்.  ஆதிராவை வரான்டாவிற்கு தூக்கிச் சென்று தன் மடியில் வைத்துக் கொண்டாள் பாட்டி. குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து அத்தனை சந்தோஷம் ஆதிராவிற்கு. கை தட்ட ஆரம்பித்தாள். எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த ரம்யா ஒரு 5 நிமிடங்கள் நின்று கவனித்தாள் . நம்மோட ரூமில் இருக்கும் பொழுது எந்தவித கலகலப்பும் இருப்பதில்லை. முகத்தில் ஒரு ஏக்கம் தெரியும். ஆனால் இப்போ ? என்ன இது ? தாங்காமல் வெளியே சென்று " ஆதிரா...! " என்றாள் . திரும்பிப் பார்த்த பாப்பா "அம்ம " என்று கையை ஆட்டியது. உடனே விளையாட்டை கவனிக்க ஆரம்பித்தது. உள்ளே சென்று லேப்டாப் ஆப் செய்தாள் . ஒரு காபி மட்டும் சூடாய் சாப்பிட்டு விட்டு அம்மாவிற்கும் கொடுத்தாள். ஆதிராவுடன் நடந்து சென்றாள். இதோ பார்க்கில்... சூரியன் முற்றிலுமாக மறையவில்லை. காற்று இதமாய் இருந்தது. ஒரு பெஞ்சில் உட்கார்ந்தனர். "எத்தனை இதமா இருக்கு. ஆதிரா தலை முடியை மெதுவாக கோதி விட்டாள் . ரமயா கையை பலமாக பிடித்துக் கொண்டது ஆதிரா.. இவள் மேனி சிலிர்த்தது. 20  நிமிடங்கள் சந்தோஷ தருணங்கள்..... " அம்மா ... கொஞ்சம் ஹால்ல விளையாடட்டும்மா ஆதிரா. அப்புறமா நான் சாப்பிடறேன். " "சரி.. இதோ நானும் வரேன்." "கொஞ்சம் விளையாடின அப்புறம் பால் கொடுத்திட்டு இங்கயே தூங்கப் பண்ணறேன். நீ கீழே அந்தப் பாயும் , பெட் சீட் போடு. " "அடியே ரம்யா. இன்னும் ஒன்னு சொல்றேன். கோவிச்சுக்காதே. இந்த diaper போடறதை கொஞ்சம் நிறுத்தக் கூடாதா? பாவம்டி குழந்தை. பிறந்த உடனே இப்படியா ஒரு தொல்லை. தேவையா யோசி. என்ன இப்ப? பாத்ரூம் போன துணியை மாத்தலாம். 1 1/4 வயசு ஆனா அதுகளே சொல்லிட்டு போகப் போறதுகள் . பழக்கிடலாம். வேண்டாம் ரம்யா. " " உம்... ! நீ இப்ப இருக்கே. ஊருக்கு நீ போய்ட்டா? " "இருந்தால் என்னடி? நீதான் இருக்கியே ? கொஞ்சம் சிரமப்பட்டால் என்ன சொல்லு ? உள்ளே இருக்கச்சே சாதா டிரஸ் போடு... அவ்வளவுதானே? வெளியே போகும் பொழுதும் diaper ரொம்ப போடாதே. கொஞ்சம் கொஞ்சமாக குறை. அதுதான் நல்லது. ரயில் பிரயாணம் , பிலைட் போகும் பொழுது யூஸ் பண்ணு . மத்தபடி வேண்டாம்டி." "ஓகே மா. ! வா வாக்கிங் போலாம். நான் ஆதிராவை தூக்கிக்கிறேன். " போகும் வழியில் அக்கம் பக்கத்து  வீடுகளில் இருப்பவர்கள் இவர்களைப் பார்த்து விசாரித்தனர். சந்தோஷமாக இருந்தது ரம்யா விற்கு. " இவா கிட்ட எல்லாம் நான் பேசினதே கிடையாது.... அவ்வளவு ஏன் ? பார்க்கிறதே இல்லை.... இது மாதிரி வெளியே வந்தால் எத்தனை சுகமா இருக்கு. இதையெல்லாம் நான் ஏன் இத்தனை நாள் மறந்தேன். ? யாருமே இல்லை, இல்லைனு நானே நினைச்சது தப்பு. நாமே வீட்டையும் பூட்டிட்டு உள்ளேயே இருந்தால் யாரு நம்மை பார்ப்பா. இனிமேலாவது காண்டாக்ட் வெச்சுக்கணும்.  " " இப்பவாது புரிஞ்சுண்டியே. டைம் கிடைக்கும் பொழுது வீட்டு வெளியே வந்து உட்காரு. முடிந்தால் ஆதிராவை கூட்டிண்டு வெளியே போ. பக்கத்திலே இருக்கறவா கிட்ட பேசு. குழந்தையை விளையாட விடு.   " " என்ன பண்றது? வேலை சரியா இருக்கு " "அப்படிதான் இருக்கும். நாமதான் எல்லாத்துக்கும் டைம் ஒதுக்கணும். தினம் இல்லைனாலும் சனி, ஞாயிறு. ஏன் முடியாது? " "சரிதான் மா. ஆதிரா வெளியே வந்தால் இப்படி குஷியா இருக்கா. நானே எவ்வளவு மிஸ் பண்ணிருக்கேன். இவள் வயித்தில் இருக்கும் பொழுது ரொம்ப போர் அடிக்கும். அப்ப எல்லாம் இப்படி வெளியே வந்து பேசியிருக்கலாம். பண்ணலே. வெறும கம்ப்யூட்டர் வேலை அப்புறம் சில படங்கள். முதுகு வலிக்கும் . வேறு வழி இல்லாமல் அப்படி செய்வேன். தப்பு நான் செய்தது. தேங்க்ஸ் மா." "என்னடி இது. எனக்குப் போய்? முதல்லயே உன்னை என் வழிக்கு கொண்டு வந்திருக்கணும்... இதோ பாரு குழந்தைக்கு முடிஞ்சவரைக்கும் பால் கொடு. பால் சுரக்கலைனா பரவாயில்லை. இருக்கற வரைக்கும் கொடுடி ரம்யா . மத்தவா முன்னாடி கொடுக்காதே. காத்தோட்டமா வெச்சுக்கோ . பால் கொடுக்கும் பொழுது வேலை செய்யாதே. ரொம்ப தப்பு. அது சாப்பிட்ட பிறகு கீழே விட்டுட்டு வேலையைப் பாரு. சூரிய வெளிச்சம், நிலா வெளிச்சத்தை குழந்தைக்கு காமி. நம்ம கர்ப்பப்பையில் இருட்டில் இருந்துதான் வெளிச்சத்தை தேடி வந்திருக்கு. அதுவும் இயற்கையான வெளிச்சத்தை காண்பி. " " சரி சரி... புரியறது.... " "இன்னும் 2 வாரம்தான் நான் சென்னை போயிடுவேன். நீ தனியா இருக்கணும். செக்கப் ஒழுங்கா போ. நான் சொன்ன மாதிரி குழந்தையைப் பார்த்துக்கோ. உன்னோட அத்தை ஒரு மாமியை அனுப்பறேன்னு சொன்னா " அம்மா கூறிக்கொண்டிருக்கும் பொழுதே வாசலில் மணி அடித்தது. "வா அத்தை. எப்படி இருக்கே.? " வரவேற்றாள் ரம்யா . "நல்லா இருக்கேன்.  இதுதான் நான் சொன்ன மாமி. நல்லா சமைப்பா. பார்த்துக்கோ. " "குழந்தை சமர்த்தா இருக்கா ? கொடு " தூக்கிக் கொண்டாள் அத்தை. வந்த மாமி 1 மணி நேரம் பேசியதில் இவர்களுக்கு பிடித்துவிட்டது. சமைத்து கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்க்கொள்ள வந்தாள் . "ரம்யா.. எப்படி இருக்கே ?  " அம்மா குரல் கேட்டதில் சந்தோஷம் "பக்கத்திலே ஒரு ஸ்கூல் கிரௌண்ட் . அதிலே சும்மா கொஞ்சம் நேரம் ஆதிராவோட வந்தேன் "  ரம்யா சொல்ல அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.   Read our other regional blogs in Tamil here -

என்ன குழந்தையா ?

ப்ளீஸ் மா…

பாட்டி…!

Share this post
Mythili Ramjee

பிஞ்சு குழந்தை உருவாகி, பெற்றெடுக்கும் பெண் தாயானவள்... அவளுக்கு இணை அவளே இப்பூவுலகில்... அந்தத் தாயின் உன்னதத்தை வெளிப்படுத்தும் கதைகள், கட்டுரைகள் இங்கு படைக்கின்றேன். சுகமான தருணங்கள், கற்பனை சந்தோஷங்கள், குழந்தை பராமரிப்பு போன்றவற்றை இதமான கதைகள் மூலம் உங்களை நிச்சயம் சந்திக்கின்றேன்...அனைவரின் அன்பான ஆதரவும், துணையும் நாடும் I am a writer/ Blogger . I have written and published 7 books in tamil. I write in English also. My writings are mostly in the form of short stories. Here, at Confused Parent .com platform I am the very first blogger in REGIONAL LANGUAGE - TAMIL. I sincerely thank Ekta Chawla for had given me this great opportunity. My focus will be mainly on motherhood, child care, child development & Issues. Seek all your support and guidance .


Thank you for the comment!