X

Getting Pregnant

Pregnancy

New Born

Toddler

Kids

By City

Collaborate With Us

என்ன குழந்தையா?

Published on: 23 February , 2018 | Ekta

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கல்யாணத்தில் இணைந்து , இல்லறத்து சுகத்தை அனுபவித்து அந்த உச்ச நிலையில் உருவாவதுதான் குழந்தை. அப்படி உருவாகும் பொழுதுதான் ஒரு பந்தம் ஏற்படுகின்றது. பாசம், நேசம், பந்தம், சொந்தம் எல்லாமே இதன் வழியில்தான் வாழையடி வாழையாக வருகின்றன.. இதுதான் நம் இந்திய கலாச்சாரம். இதை முறியடிப்பதோ,  வரம்பை மீறி செயல் படுவதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. என்னைப் பொறுத்த வரையில் பெண்  அல்லது ஆண் தனது வாழ்க்கையை ஒரு வரம்போடு  வாழ்வதே உசிதம். வயது வந்த பெண் அல்லது ஆண் தனக்கு ஏற்ற இல்லற துணையை தானாகவோ அல்லது தனது பெற்றோர், பெரியவர்கள் மூலமோ ஒருவரை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது.   அப்படித் தேர்ந்தெடுத்த துணையுடன் இல்லற சுகத்தை அனுபவிப்பதுதான் சாஸ்திரம். இதில் காணும் இன்பமும் , சுகமும் வேறெதிலும் இல்லை. தங்கள் வாரிசு உருவாகும் தருணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு வரப்பிரசாதம்.  அப்படிப் பிறக்கும் குழந்தைக்கு இருக்கும் சொந்தங்களோ எண்ணில் அடங்காதவை... இதை எல்லாம் ஒதுக்கி விட்டு ஒரு பெண்ணோ, அல்லது ஆணோ கல்யாணத்தை புறக்கணித்து  தாம்பத்திய உறவில் ஈடு பட்டு உருவாகும் குழந்தையை எப்படி வரவேற்பது என்பது எனக்கு விளங்கவில்லை.. அந்தக் குழந்தைக்கு எந்த அடிப்படையில் அடையாளம் கொடுப்பது என்றும் புரியவில்லை.  அப்படிப் பிறந்தக் குழந்தையை ஒரு பெண்ணால் வளர்க்க முடியுமா என்பது கட்டாயம் ஒரு கேள்விக் குறியே..! "இதில் என்ன தவறு ? " என்று சில விஷமிகள் கேட்கலாம். அதற்கு பதில். ஆமாம் தவறுதான் என்பது எனது ஆழமானக் கருத்து. என்ன அவசியம் ஒரு குழந்தைக்கு கல்யாணத்திற்கு முன்? காதலிக்கிறீர்களா ?  பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அதுவரை கட்டாயம்  வரம்போடு வாழுங்கள். உங்களால் அப்படி வாழ முடியவில்லை என்றால் இவ்வுலகை விட்டுச்  செல்லுங்கள். எதற்காக ஒரு குழந்தையை உருவாக்கி அதன் வாழ்க்கையை ஒரு கேள்விக் குறியாக்க வேண்டும் ?  நீங்கள் கெட்டது போக அது அனாதையாக ஒரு குப்பை தொட்டியில்!! தேவையா?  சொல்லுங்கள். விதிவசத்தால் ஒரு வஞ்சகனால் உருவாகும் குழந்தை ( கொடூர கற்பழிப்பு ) என்பதை யாராலும் தடுக்க இயலாது அந்தச் சூழ்நிலையில் உருவாகும் குழந்தைக்கு அந்தப் பெண் எந்த விதத்திலும் பொறுப்பானவள் அல்ல. இருப்பினும் ஒரு கால கட்டத்தில் அதை சுமந்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் பொழுது அந்தப் பெண்ணை பரிவோடும், அனுதாபத்தோடும் பேணிக்காப்பாற்றுவது பெற்றோர் மற்றும் இந்தச்  சமுதாயத்தின் பொறுப்பு. தவறு செய்த ஆடவனின்  கை அல்லது காலை வெட்டி எடுக்கவும் தயங்க கூடாது. அப்பொழுதுதான் மற்றொருவனுக்கு இது ஒரு பாடமாக அமையும். மீண்டும் ஒரு தவறு, குற்றம் நடைபெறுதல் குறையும். இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைதான். இதற்கு அப்பாவிப் பெண்களும் அவர்கள் வயிற்றில் தவறிப் பிறக்கும் குழந்தைகளே பலியாடுகள்  ! கல்யாணம் செய்து கொள்ளாமல் இருவர் ஒன்றாய் வாழ்ந்து வருவது ஒரு இழிவே..!  இதனை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவது தவறு.  இதன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பதும் அபத்தமே ! குழந்தைப்  பெற்றுக்கொள்ளுவது எனது உரிமை அதற்கு யார் தடை போடுவது . நான் கல்யாணம் செய்து கொள்ளாமல் பெற்றெடுப்பது எனது உரிமை என்று வாதித்தால், அப்படிப் பட்ட ஆணையோ பெண்ணையோ விபச்சார சட்டத்தின் கீழ் கைதி செய்வதுதான் முறை. அப்படி செய்தால்தான் இந்தச் சமுதாயம் ஒரு கலாச்சார ஒழுக்கமானதாய் இருக்கும் என்பது எனது தனிப் பட்ட தாழ்மையான கருத்து. . கல்யாண பந்தத்தில் இணையாமல் இருவர் சேர்ந்து பெற்றெடுக்கும் குழந்தைக்கு ஏது அங்கீகாரம் ? பாதுகாப்பு?  இருவரும் எப்பொழுது வேண்டுமானாலும் பிரியலாம். இருவருக்கும் தொடர்பு இல்லாமலே போகலாம். இதுதான் உண்மை. இப்படி ஒழுக்கம் தவறி பிறக்கும் குழந்தை வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியே!  இவ்ரகள் சுகத்திற்காக ஒரு சிசுவை உருவாக்கி அதன் எதிர்காலத்தை சூனியமாக்குவது முறையா? இல்லற சுகத்தை அனுபவிக்கத்தான் கல்யாண பந்தம் ஏற்படுத்தினர் . அதனைப் புறக்கணித்து வாழும்  வாழ்க்கை    ஒரு வாழ்க்கையா? எப்படிப் பார்த்தாலும் நம் இந்திய கலாச்சாரப்படி குழந்தை பெற்றெடுப்பது என்பது கல்யாணம் ஆன தம்பதிகளுக்கு தான் பொருந்தும் . இதில் எந்த வித மாற்றுக்  கருத்தும் இல்லை. 
Share this post
Ekta

A doting mom to an angel, Social Media Specialist & Professional Blogger. She loves to share her thoughts with other parents in the same turbulent boat. She absolutely loves & adores her family & is learning to strike a good work-life balance. When she is not writing, cooking or busy taking care of her toddler, she probably is dancing to some good desi music!


Thank you for the comment!