"வைஷாலி..!என்ன இன்னுமா தூங்குவே? எழுந்திரு... ஸ்கூல் போக நேரமாச்சு.." பூமா தன் 14 வயது மகளை எழுப்பினாள் .
"ஊம் ..அம்மா கொஞ்சம் தூங்கறேனே..."
"நோ..டைம் ஆச்சு." வைஷாலிகையைப் பிடித்து எழுப்பினாள். போன் அடித்தது.
"பூமா நான் ஷோபா . மத்தியானம் இருப்பியா வீட்டில். உன்னோட கொஞ்சம் நேரே பேசணும். "
" வா. வா.எங்கேயும் போகலே "
"சரி ஒரு 2.30 மணிக்கு வரேன். "
ஷோபா பூமாவுடன் ஒன்றாய் ஸ்கூலில் படித்தவள். 2.30 மணிக்கு சரியாக காலிங் பெல் அடித்தது. ஷோபா வாசலில்.
" வாவ். !வா.வா.எத்தனை நாள் ஆச்சுடி உன்னைப் பார்த்து." பூமா அழைத்து விட்டு இரண்டு கப் சூடான காபியுடன் வந்தாள்.
" உம. சொல்லு. என்ன விஷயம்? "
" என் நாத்தனாருக்கு 36 வயசு ஆறது. கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆச்சு .குழந்தை இல்லை. ஆனா, இப்ப 40 நாள் தள்ளிப் போயிருக்கு. அவ ரொம்ப பயப்படறா. 36 வயசாச்சே. குழந்தைப் பிறக்கும் போது 37 ஆகும். எப்படி குழந்தை ஆரோக்கியமா இருக்குமா ? நல்லா பிறக்குமா ? எத்தனையோ யோசனை .உன் அம்மா பெரிய மகப்பேறு டாக்டரா இருந்தா. உனக்கு கொஞ்சம் அனுபவம் இருக்கும் இல்லையா ?அதான் உன்கிட்ட அதைப் பற்றி பேசலாம்னு வந்தேன். "
" அவ்வளவுதானே? எதுக்குடியம்? முதல்ல அவளை congratulate பண்ணனும். 36 வயசிலே கர்பம்தரித்திருக்கறது நல்ல விஷயம். இப்ப இருக்கற பெண்கள் 27 வயசிலேயே எல்லாம் முடிஞ்சிடுறதுன்னு நினைக்கறா. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. "
"முதல்ல அவ நல்ல டாக்டர் பார்க்க சொல்லு. Confirm பண்ணிக்க சொல்லு.
36 வயது என்பது ஒன்றும் கிழவி வயதில்லை.அதை முதலில் மனதில் பதிக்க வேண்டும்.
இதோ பாரு... எங்க அம்மா இப்ப இல்லைனாலும், அவ நிறைய இதைப் பற்றி எழுதி இருக்கா. இந்த புக் .நீயும்படி, உன் நாத்தனாரையும் படிக்க சொல்லு .முக்கியமானதை உனக்கு இப்ப படிக்கிறேன்..
_______________________________________________________________________
ஒரு பெண் கர்ப்பம்தரிக்க மிகவும் ஏற்ற வயது 21 லேர்ந்து 30 வரைக்கும். அதற்கு மேல் கரு முட்டையிடும் அளவு குறையும் அதன் சக்தி பலமும் குறையும். எனவே 30 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிப்பது சற்று கஷ்டம். ஆனால், 30 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் கட்டாயம் உண்டு. கருமுட்டைகளின் அளவு குறையும் பட்சத்தில் சற்று கடினம் என சொல்ல வந்தேன். எனது அனுபவத்தில் 35 வயது முதல் 45 வயது வரை எத்தனையோப் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.
கடவுளின் படைப்பு ஒரு பெண்தன் இளம் வயதில் கருத்தரிக்க ஏற்றதாகவும், நாட்கள் செல்ல, செல்ல அவள் கருமுட்டைகள் இடுவது குறைவதும். அதனால்தான் அந்தக் காலத்தில் பெண்களுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து முடித்தனர். அதிலும் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்தன. . 13 முதல் 18 வரை கருத்தரிப்பது ஆரோக்கியமானதல்ல. உடல் ரீதியாய் அவள் ஆரோக்கியமாக இருந்தாலும் மனதளவில் அது பல சிக்கல்களை உண்டாக்கின என்பது மறுக்க முடியாது. வாயைத் திறந்து எதையும் சொல்ல முடியாத வயது. பெண் என்பதால் எதிர்த்து பேச தைரியமின்னையும் இதற்கு ஒரு காரணம். இதை எல்லாம் மனதிற் கொண்டு பெண்ணின் திருமண வயது 21 என ஆனது.
இப்ப இருக்கிற காலகட்டத்தில் பெண்கள் நன்றாய் படிக்க ஆரம்பித்து வேலைக்கும் செல்கின்றனர். அதனால் திருமணமும் தாமதமாகிறது. அப்பொழூது கருத்தரிப்பும் தாமதம்தான்!! இதற்கு முக்கிய காரணம் டென்ஷன், சரிவர சாப்பிடாமல் வயிற்றைக் காயப்போடுவது, ஷிபிட்ஒர்க் .கணவன், மனைவி சேர்ந்து வாழ்வதே அபூர்வம் என்கிற நிலைக்கு இன்று தள்ளப் பட்டுள்ளோம். இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் 35 வயதிற்கு மேல் குழந்தை தரிப்பது ஒன்றும் அதிசயமான ஒன்றாய் எனக்கு தெரியவில்லை. ஆனாலும், 35 வயதிற்கு அப்புறம் கொஞ்சம் கட்டாயம் கவனம் தேவை என்பதை என்றும் மறக்க கூடாது.
என்னால் முடியும் என்கிற தைரியம் ஒரு பெண்னை எதையும் சாதிக்க உறுதுணையாய் இருக்கும் என்பதால் ஐயம்இல்லை.
பெண் வாழ்வில் ஒரு பொற்காலம் இந்தக் கர்ப்பகாலம்.... ஆனால் அதனை முழுமையாக உணர்ந்து ரசித்து, அனுபவித்தோர் மிகவும் குறைவு என்றுதான் ஆராய்ச்சி சொல்கிறது. ..
பெண், கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்ட அந்த நொடியிலிருந்து வாழ்வினை அணு அணுவாய் அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ..
- உங்கள் உணர்வுகளை, சந்தோஷத்தை நண்பர்கள் அல்லது, சகோதரி, நெருங்கிய உறவினர்களிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். ...
- அம்மாவின் அரவணைப்பு மிகவும் தேவை. .. இதனை பாக்கியம் உள்ளவர்கள் கட்டாயம் தவறவிடக்கூடாது.... மாமியார் என்ன சொல்வார்? எப்படி? என்று விட்டு விடாதீர்கள். .. திரும்பவும் இந்த பருவம் வரவே வராது. ..
- சந்தோஷ சூழ்நிலையில் வாழ கற்றுக் கொள்ளுங்கள். ...
- எவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், பேசட்டும் நீங்கள் உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்
- மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். .
- முற்போக்காய், தன்னம்பிக்கையுடன் இருங்கள்
- மனதிற்கு இதமான இசையை கேளுங்கள்.
- வீட்டில் சச்சரவுகள் இருப்பின் உங்கள் தலையில் போட்டுக் கொள்ளாதீர்கள். ..அதை கவனிக்க போராட மற்றவர் இருக்கிறார்க்ள். .
- மாமியார்சண்டை, நாத்தனார் தொண தொணப்பு என்று எதையும் சட்டை செய்யாதீர்கள் ....காதையும், வாயையும் மூடிக் கொள்ளுங்கள். .
- உங்களுக்குத் தேவை அமைதியான தூக்கம்
- வாய்க்கு பிடித்ததை நன்றாய் இடைவெளி விட்டு அடிக்கடி சாப்பிடுங்கள். .. மசக்கை இருந்தால் கவலை வேண்டாம். ...
- தண்ணீர் நிறைய குடியுங்கள். ..
- குழந்தையின் உருவம் ,அதன் வளர்ச்சி, அது கொடுக்கப் போகும் நல் உறவு இதை பற்றியே சிந்தியுங்கள். .
- தேவையற்ற யோசனைகளை விளக்கி வையுங்கள். .
- சத்தமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. .
- நேரம் கிடைக்கும் பொழுது கணவருடன் பேசுங்கள். ... உங்கள் உள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். .
- தோழிகளிடம் அவர்கள் அனுபவங்களை, சந்தோஷ நிகைழ்வுகளை கேட்டு நீங்களும் சந்தோஷப்படுங்கள். ..
- தேவையற்ற பயத்தை தள்ளி வையுங்கள். ..
- வாய்க்கு சாப்பாடு பிடிக்கவில்லை என்று வயிற்றை காயாப் போடாதீர்கள். .. அது மிகவும் தவறு. ..
மேற் கூறியவை பொதுவானவை. ஆனால், 35 வயதிற்கு மேல் கருதரிக்கும் பெண்கள் கவனமாக இருக்க சில உக்திகள்
- டென்ஷனை கட்டாயம் குறைக்கணும் டென்ஷன் ,பிரஷர் இரண்டும் விலகினாலே போதும் மற்றதெல்லாம் தானா அமையும்.
- கட்டாயமாக முறையாக antenatal classes போகவேண்டும். . அவளை டாக்டர் மேற் பார்வையில் வைத்திருப்பார். எந்த ஒரு சிறு பிரச்சனை ஆனாலும் உடனே சரி செய்துவிட இது முக்கியம்.
- புதிதாக எதுவும் exercise செய்றேன் பேர்வழி என்று எதையும் செய்ய முற்பட வேண்டாம். அவள் டாக்டரின் ஆலோசனைப்படி conceive ஆகும் முன் செய்துக் கொண்டிருந்த எளிய பயிச்சிகளே போதுமானதாகும்.
- யோகா முறை த்யானம் ..முறையாக தினசரி சில நிமிடங்கள் செய்தால் மிகவும் நல்லது.
- 35 வயதிற்கு மேல் உண்டானால் சில சமயங்களில் abortion ஆக வாய்ப்புகள் உள்ளன. எனவே முதல் 3 மாதங்கள் கட்டாயம் டாக்டரின் மேற்பார்வையில் இருப்பது நல்லது.
- 300 ல் 1 குழந்தை Downs Syndrome என்கிற குறைப்பாடோடு பிறக்க வாய்ப்புள்ளது. எனவே, 10 -12 வாரங்களில் ஒரு டெஸ்ட் மூலம் இதனை அறிந்து அதற்கேற்றாற் போல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் .நான் பயமுறுத்த இதைக் கூறலே. ஆனால், இதையும் மனதில் வைத்துக் கொள்வது அவசியம். Downs Syndrome என்பது மூளை மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடு. எச்சரிக்கையும் முன் ஏற்பாடும் முக்கியமான ஒன்று. அதற்காகத்தான் இதனைக் குறிப்பிடுகிறேன்.
- நடைபயிற்சி மிகவும் முக்கியம். இந்தக் காலக்கட்டத்தில் சுகர், மற்றும் bp லெவல் அதிகமாக வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
- எப்போதும் காற்றோட்டமான இடத்தில் வசிப்பது அவசியம். அதுவும் வெளிப்புறக் காற்று மிகவும் முக்கியம்.
- எல்லாவற்றிற்கும் மேலாக மனம் லேசாய் இருக்க வேண்டும்.
- கணவனின் அன்பான பேச்சு, ஆதரவான செயல்கள் அவளை ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வழி செய்யும்.
- சத்தான ஆகாரம், மனசுக்கு நிறைவான அமைதி தரும் இசை இவை கூடுதல் boost.
கர்ப்பகாலத்தில் எடுக்க வேண்டிய ஸ்கேன்கள்...சில குறிப்புகள்.
6 - 9 வாரங்களில் - T V S ( Transvaginal scan )
11 - 13 வாரங்களில் - N .T (screen for down 's syndrome ) கூடவே ரத்த சோதனையும் செய்வது நல்லது.
18 - 20 வாரங்களில் - Anomaly scan (ultrasound level 11)
28 - 32 வாரங்களில் - ஸ்கேன் குழந்தையின் வளர்ச்சி மற்றும் கர்பப் பையில் எந்த நிலையில் உள்ளது என்பதனை அறியவே.
சில மருத்துவர்கள் Doppler scan செய்யச் சொல்வர். இதன் மூலம் உங்களுக்கும் , குழந்தைக்குமான ரத்த ஓட்டத்தை வெளிப்படுத்தும். சீராக உள்ளதா என அறியவே.
பெண்ணே..! எதற்கும் கவலைப்படாதே. பிறப்பிலேயே நீ மனம் மற்றும் உடல் பலத்தை அதிகம் பெற்றுள்ளாய்...
ஆரோக்கியமான, அழகான குழந்தை உன் கையில். ..
"பூமா. எத்தனை அழகா எழுதிருக்கா உங்க அம்மா. எனக்கு கொஞ்சம் தைரியம் வந்திருக்கு. இன்னிக்கு சாயங்காலம் என் நாத்தனாரை டாக்டர்கிட்ட கூட்டிண்டுப் போறேன். நான் கிளம்பட்டுமா? அப்புறம் போன் பன்றேன். தேங்க்ஸ். "
" புக்கை அவகிட்ட மறக்காமல் கொடு. "
"கட்டாயமா. பை. "
ஷோபா கிளம்பியவுடன் , பூமா தோசைக்கு அரைக்க ஆரம்பித்தாள்.
பிஞ்சு குழந்தை உருவாகி, பெற்றெடுக்கும் பெண் தாயானவள்... அவளுக்கு இணை அவளே இப்பூவுலகில்... அந்தத் தாயின் உன்னதத்தை வெளிப்படுத்தும் கதைகள், கட்டுரைகள் இங்கு படைக்கின்றேன். சுகமான தருணங்கள், கற்பனை சந்தோஷங்கள், குழந்தை பராமரிப்பு போன்றவற்றை இதமான கதைகள் மூலம் உங்களை நிச்சயம் சந்திக்கின்றேன்...அனைவரின் அன்பான ஆதரவும், துணையும் நாடும்
I am a writer/ Blogger . I have written and published 7 books in tamil. I write in English also. My writings are mostly in the form of short stories. Here, at Confused Parent .com platform I am the very first blogger in REGIONAL LANGUAGE - TAMIL. I sincerely thank Ekta Chawla for had given me this great opportunity. My focus will be mainly on motherhood, child care, child development & Issues. Seek all your support and guidance .