சென்னையில் சிறந்த மகப்பேறு மருத்துவமனைகள்

சென்னையில் சிறந்த மகப்பேறு மருத்துவமனைகள்

ஒரு பெண்ணின் வாழ்வில் வரப்பிரசாதம் கர்ப்ப காலமாகும். தாய்மை உணர்வு என்பது மகத்தானது. என்றாலும், எந்த ஒரு பெண்ணிற்கும் தன் பிரசவ நேரத்தைக் குறித்த பயம் என்பது மனதில் இருக்கும் என்பது முற்றிலும் உண்மை.  தன் தாய்,  சகோதரி மற்றும் தோழியிடம் அவர்களின் பிரசவகால கதைகளை கேட்டிருப்பினும் கையாளப்போகின்றோம் என்கிற தயக்கம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் சென்னையில் சிறந்த மகப்பேறு மருத்துவமனைகள்……

ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவமனையை தேர்ந்தெடுத்துவிட்டாலே பாதி பயம் மறைந்துவிடும்.

சென்னையில் உள்ள சிறந்த மகப்பேறு மருத்துவமனைகளின் பட்டியலை கீழே காணவும்.  பட்டியல் எந்த தர வரிசையிலும் கொடுக்கப் படவில்லை.

சில குறிப்பிட்ட அளவுகோல்களை  மனதில் வைத்து நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவமனையை தேர்வு செய்யலாம்–

  1. வீட்டின் அருகாமையில் உள்ள மருத்துவமனை
  2. ஒட்டு மொத்த செலவு
  3. அனுபவம் & தனிப்பட்ட கர்ப்ப பராமரிப்பு வல்லுநர்கள் உள்ள மருத்துவமனை
  4. குழந்தை மருத்துவர்கள் உள்ள மருத்துவமனை
  5. குறிப்பிட்ட மருத்துவர் சேவை செய்யும் இடம்.

 

மேற்கூறிய அனைத்தையும் மனதிற் கொண்டு முடிவு செய்யுங்கள்.

Contents

சென்னையில் உள்ள சிறந்த மகப்பேறு மருத்துவமனைகளின் பட்டியல் வருமாறு..

சுந்தரம் மருத்துவ அறக்கட்டளை, அண்ணாநகர்

முகவரி: எண் 9 சி. 4 வது அவென்யூ, சாந்திகாலனி, அண்ணாநகர், சென்னை – 600040.

தொடர்புஎண்: 044-26268844 / 26144100.

நியமனங்கள் – 26144123/124/125

சுந்தரம் மருத்துவ அறக்கட்டளை ஒரு வியாபார ரீதியாக செயல்படாமல் சேவை அடிப்படையில் இயங்கும் மருத்துவமனையாகும். அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பலர் சேவை செய்யும் அந்த மருத்துவமனையில் சிறந்த வசதிகள் உள்ளன. சுற்று சூழல் அருமை .தாய்மார்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் மகப்பேறு மருத்துவமனை இது.

 

க்ளவுட் நைன் மருத்துவமனை,  டி. நகர்சென்னையில் சிறந்த பிரீமியம் மகப்பேறு மருத்துவமனை.

முகவரி: இல. 54, விஜயராகவா சாலை,. ஹயட் ரெஜென்சி எதிரில், டி.நகர், சென்னை – 600017.

தொடர்புஎண்: 1860 500 9999

தாய்சேய் நலனில் உலகதரம் வாய்ந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. சர்வதேச மருத்துவ நிபுணர்கள் இங்கு பணி புரிகின்றனர்.

கர்ப்பம் தரிக்கும் நேரத்திலிருந்து பிரசவம் வரையிலான உங்கள் பயணத்தில் க்ளவுட் நைன் உற்ற துணையாய் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. பணம்வசதி உள்ள பெண்களுக்கு உகந்த இடம்.

பரிந்துரைடாக்டர் :

டாக்டர்கனிமொழிமற்றும்டாக்டர்.நஜிரா

 

அப்பல்லோ தொட்டில், ஆயிரம்விளக்கு &அப்பல்லோ மருத்துவமனை, நுங்கம்பக்கம்சிறந்த

ஆடம்பர மகப்பேறு நர்சிங் இல்லம்

முகவரி: ஷாபி முகம்மது சாலை, ஆயிரம் விளக்கு மேற்கு, சென்னை –

தொடர்பு எண்: 044-28298282 / 044-44244424

கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையானது சென்னையில் மிகவும் விருப்பமான மருத்துவமனைகளில் ஒன்றாகும். வசதிக்காகவும்,  நல்ல சேவைக்காகவும் பெண்கள் இதனை தேர்ந்தெடுக்கிறார்கள்.  கூடுதல் கட்டணத்தை பற்றி கவலைப் படாத பணக்காரர்களுக்கு இந்த மருத்துவமனை ஒரு வரப்பிரசாதம்…

இங்கு பிரீமியம் சேவைகள் வழங்கப்படுகின்றன., அப்போலோ தொட்டில் தாய் சேய் நல பிரிவில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை மிகவும் கவனத்தோடு அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைடாக்டர்:

டாக்டர்.பத்மபிரியா&டாக்டர்நிர்மலாஜயசங்கர்

வெங்கடேஸ்வர மருத்துவமனை,  நந்தனம்

முகவரி: எண் 36 ஏ, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை, நந்தனம் விரிவாக்கம், நந்தனம், சென்னை – 600035.

தொடர்புஎண்: 044 45111111 / 044-42125212

பாதுகாப்பு மற்றும் முழுமையான நல்வாழ்வை மையமாகக் கொண்ட பல சிறப்பு மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. . கர்ப்ப காலத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை சிறந்த பராமரிப்பு அளித்து மக்களின் மனதில்ஒரு நீங்கா இடம் பிடித்துள்ள மருத்துவமனை இது.

பரிந்துரைடாக்டர்: டாக்டர்சாந்திசஞ்சய்

இசபெல் மருத்துவமனை,  மைலாப்பூர்

முகவரி: எண் 49, ஆலிவர் சாலை, மைலாப்பூர், லூஸ் சர்ச் அடுத்து, சென்னை – 600004.

தொடர்புஎண்: 044-24991081 / 82/83.

சென்னையில் ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவமனை. அது மட்டும் அல்ல. நடுத்தர மக்கள் தைரியமாக தங்களின் குடும்ப வாரிசை பெற்றெடுக்க ஒரு அற்புதமான கோயில் இது.

பல பெண்களால் நம்பப்பட்ட இந்த மருத்துவமனை, மகப்பேறு சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. நியாயமான விலையில் நல்ல வசதிகளுடன், இஸபெல் மருத்துவமனை அன்று முதல் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது.

பரிந்துரை டாக்டர்: டாக்டர் உஷா கிருஷ்ண குமார்

வி.கல்யாணி மருத்துவமனை,  மைலாப்பூர் (சீதாபதி கிளினிக் என்றும்அறியப்படுகிறது)

முகவரி: எண் 4, 2 வது தெரு, ஈ.வி.கே கட்டிடம், டாக்டர் ராதா கிருஷ்ண சாலை, மைலாப்பூர்,  சென்னை – 600004.

தொடர்பு எண்: 044-28473996 / 044-49496666 / 044-28130749

பெரும்பாலான நம்பகமான மகப்பேறு மருத்துவமனையில் இதுவும் ஒன்று. சீதாபதி மருத்துவமனை ஒரு ‘மக்கள்’ மருத்துவமனையாக தேர்வு செய்யப்படுகிறது. பல மருத்துவமனைகள் வியாபார நோக்குடன் இயங்கும் பொழுது, இந்த மருத்துவமனை ஒரு வித்தியாசமாக மனித நேயத்துடன் செயல்படுகிறது.  இங்கு உள்ள செவிலியர் மற்றும் மருத்துவர்கள் மிக நுணுக்கமான மருத்துவ சேவைகளை தருகிறார்கள். மிகவும் நட்புடனும்,

அன்புடனும் அவர்கள் தங்கள் பணிகளை செய்கின்றனர்.

பரிந்துரை டாக்டர்: டாக்டர் உமாராம்

பிரசாந்த் கிளினிக்

முகவரி:  77, ஹாரிங்டன் ரோடு, சேட்பெட்,  ஹாரிங்டன் சப்வே அருகில், சென்னை – 600031.

தொடர்பு எண்: 044-42277777

IVF சிகிச்சை மூலம் சென்னையில் சிறந்த மகப்பேறு மருத்துவமனை

டாக்டர். கீதாஹரிப்ரியா பிரசாந்த் கிளினிக்கில் தலைமைக் கழக நிபுணர் ஆவார்.

IVF சிகிச்சையில் சிறந்து விளங்குகிறது இந்தமகப்பேறு மையம்.  பல குழந்தை இல்லாத ஜோடிகளுக்கு நம்பிக்கையை அளிக்கிறது.” சிகிச்சைக்கு பணம் நிறைய செலவழித்தாலும் ஒரு குழந்தையைப் பெற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது ” என்று 10 வருடங்களுக்குப் பிறகு தாயான ஒருவர் கூறியுள்ளார். .

பரிந்துரைடாக்டர்: டாக்டர். கீதாஹரிப்ரியா

சிம்ஸ் மருத்துவமனை,  வடபழனி

முகவரி: எண் 1, ஜவஹர்லால்நேருசாலை (100 அடிசாலை), வடபழனி, (மெட்ரோநிலையம்அருகில்) சென்னை – 600026.

தொடர்புஎண்: 044-20002001

உயர்தர  வசதிகளுடன் கூடிய மகப்பேறு மருத்துவமனை. எஸ்ஆர் எம்.  குழுமத்தின் மற்றுமொரு அங்கம். தரம் வாய்ந்த உயர்தர வசதிகள் கொண்ட சகல வசதிகளும் உள்ளடங்கிய மருத்துவமனை இது.

டாக்டர்பரிந்துரை: டாக்டர்பி. கோபிநாத்

ராமச்சந்திர மருத்துவமனை,  போரூர்

முகவரி: எண் .1, ராமச்சந்திரநகர், போரூர், சென்னை – 600116.

தொடர்புஎண்: 044-45928500 / 044-45928518

1985 ஆம் ஆண்டு முதல் மகப்பேறு பராமரிப்பை வழங்கி வருகிறது.  இந்த மருத்துவமனையில், 24/7 நேரமும் தகுதியுள்ள டாக்டர்கள் மகப்பேறு பிரிவில்  மிகவும் தகுதியுள்ள டாக்டர்கள்  தங்கள் சேவையை வழங்கி  வருகின்றனர்.  மரபியல் ஆலோசனையிலும் சிறந்து விளங்கும் மருத்துவமனையாகும்.

பரிந்துரைடாக்டர்: டாக்டர்உஷாராணி

 

ஃபோர்டிஸ் மலர்,  அடையார்

முகவரி: No.52, 1st Main Road, காந்திநகர், அடையார் , சென்னை – 600020.

தொடர்புஎண்: 044-42892222

ஃபோர்டிஸ் மலர் சென்னையில் மிகவும் விருப்பமான பல சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாகும். 1992 இல் ஒரு பிரதான இடத்தில் நிறுவப்பட்டது, சமீபத்திய தொழில் நுட்பத்துடன் கூடிய அனைத்த்து வசதிகளும் கொண்ட சிறந்த மகப்பேறு பிரிவு கொண்ட மருத்துவமனையாகும் இது.  சனிக்கிழமைகளில் பல பாதுகாப்பு வகுப்புகளும் நடத்துகின்றனர்.  பாதுகாப்புடன் பயமில்லாமல் குழந்தையை பெற்றெடுக்க சிறந்த இடம். இங்கு இன்குபேட்டர் பிரிவு சிறந்து விளங்குகின்றது.

பரிந்துரை டாக்டர்:  டாக்டர். நித்தி யா ராமமூர்த்தி

டாக்டர். ஜெய்ஸ்ரீ கஜராஜ்

சி.எஸ்.. கல்யாணிமருத்துவமனை, மைலாப்பூர்

முகவரி: . 15, டாக்டர்ராதாகிருஷ்ணசாலை, மைலாப்பூர், சென்னை – 600004.

தொடர்புஎண்: 044-28470642

சென்னையில் நடுத்தர மக்களும் சிறந்த மகப்பேறு சேவைகள் பெற ஒரு சிறந்த இடம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தத் துறையில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு C.S.I நர் சிங் கல்வி வழங்குகிறது. இந்த நன்கு அறியப்பட்ட சுகாதார நிறுவனம் தேவைப் படு  வர்களுக்கு மானிய மருத்துவ உதவி வழங்குவதற்காக தொண்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது.

பரிந்துரைடாக்டர்: டாக்டர். ராஜ்குமாரி&டாக்டர்பிரேமாடேவிட்

அழகான ஆரோக்கியமான குழந்தை உங்கள் கையில்….!

You can also read

Best IVF Specialists & Centres in Chennai With High Success Rates

Best Places To Visit In Chennai With Kids

She is not a parent, but why is she called “Amma”

Share on social media

1 Comment

  • by Chitra Posted January 24, 2019 12:23 pm

    Dr. Mehta’s Hospital in Chetpet also provides excellent maternity services in Chennai. They have been in the Hospital Industry for more than 85 years providing excellent hospital outcomes.

Add Comment

Your email address will not be published. Required fields are marked *

Click Here To Translate »